இந்தியா சென்று இன்னொரு கடன் கேட்டார் பசில்

4 years ago
Sri Lanka
(71 views)
aivarree.com

இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் பெறும் ஒப்பந்தம் வியாழக்கிழமை கைச்சாதாகவுள்ளது.

இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் மற்றும் திறைசேரி செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல ஆகியோர் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

இதேவேளை இந்தியாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவுக்கு மேலும் 250 மில்லியன் டொலர் கடனை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான கோரிக்கையை பசில் ராஜபக்‌ஷ அந்நாட்டு அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளார் என அறியமுடிகிறது.

ஏற்கனவே இந்தியா இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவுக்காக 500 மில்லியன் டொலர் தருகின்ற நிலையில், அதனை 750 மில்லியனாக உயர்த்த கோரப்படுகிறது.

Reported by
Editorial Reporter