நாட்டில் எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய பொருட்கள் என அனைத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஒதுக்கத்தை விட, வெளிநாட்டு பொறுப்புகள் அதிகரித்து, அந்நிய செலாவணி மறை பெறுமதியில் இருக்கிறது.
இதனை வங்குரோத்து என்று சொல்ல முடியாது என்றால் எதனை வங்குரோத்து என்று சொல்வார்கள்? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றிய அவர், நாடு வங்குரோத்து அடைந்துவிட்டது என்று சொல்வதற்கு வாய் கூசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து வேலைத் திட்டம் ஒன்றை முனெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
