ஆட்சி கவிழ்ப்பு கூட்டமா? / அடியோடு மறுக்கிறார் சுமந்திரன்

4 years ago
Sri Lanka
(146 views)
aivarree.com

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரனின் ஏற்பாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் கலந்துகொண்ட மூடிய அறை கூட்டம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டம் இலங்கையில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியாக அமைந்துள்ளதாக ஆளுந்தரப்பு உறுப்பினரகள் சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.

இதுதொடர்பாக அய்வரி செய்திகளுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இது முற்றிலும் பொய்யான கருத்து என்றார்.

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் அதன் மீட்சி தொடர்பாக நடத்தப்பட்ட இந்த கூட்டங்களில், பல பொருளாதார வல்லுனர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இது மூடிய அறை கூட்டமாக இருந்த போதும், இரகசிய கூட்டம் இல்லை என்று எம். ஏ. சுமந்திரன் கூறினார்.