அமெரிக்காவின் மிசோரியில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் பலியாகினர்.
கடும் பனிமூட்டம் காரணமாக ஏறக்குறைய 47 வாகனங்கள் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து இடம்பெற்ற பகுதி மூடப்பட்டு பாரவூர்திகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
