ஹட்டனில் போலி வைத்தியர் கைது/ போலி மருந்துடன் போதை மாத்திரைகளையும் விநியோகித்துள்ளனர்

4 years ago
Sri Lanka
(389 views)
aivarree.com

ஹட்டன் – கொட்டகலை பகுதியில் எவ்வித மருத்துவ சான்றுகளும் இன்றி போலி வைத்தியம் பார்த்து வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் அவருக்கு உதவியாக இருந்த மேலும் மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் இந்த பகுதி மக்களுக்கு போலியான முறையில் சிகிச்சைகளை மேற்கொண்டு மருந்துகளையும் விநியோகித்துள்ளனர்.

மருந்துடன் போதைப் பொருட்களையும் அவர்கள் விநியோகித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள எமது வட்சப் குழுவில் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/DzIgQk7SDjJJVFUqb6BU8w