Bவெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவோருக்கான அறிவிப்பு 

4 years ago
(254 views)
aivarree.com

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு, ஊக்குவிப்பு கொடுப்பனவாக மத்திய வங்கி ஒரு தொகையை வழங்கி வந்திருந்தது.


இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு இனி வழங்கப்பட மாட்டாது என்று இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


ரூபாவின் பெறுமதி மிதப்பில் விடப்பட்டதை அடுத்து, வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி ஊக்குவிப்பு கொடுப்பனவுக்கு நிகரான பெறுமதியை அடைந்துள்ளது.


அத்துடன் இந்த மாதம் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற அந்நிய செலாவணியும் அதிகரித்துள்ளது. 


எனவே இனி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டியதில்லை என்று தீர்மானத்தை மத்திய வங்கி மேற்கொண்டிருக்கிறது.