ரஷ்ய – உக்ரைன் பிரஜைகள் இலங்கையில் மோதிக்கொள்ளும் அபாயம்!

4 years ago
Sri Lanka
(103 views)
aivarree.com

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளாக வந்த பல ரஷ்ய மற்றும் உக்ரைன் நாடுகளின் பிரஜைகள் ஒன்றாக தங்கியுள்ளனர்.

சுமார் 10000 ரஷ்யர்களும், 4000 உக்ரைனியர்களும் கிட்டத்தட்ட ஒரே ஹொட்டலில் அல்லது ஒரே பிரதேசத்தில் இலங்கையில் தங்கியுள்ளனர்.

அவர்களுக்கு இடையில் சண்டைகள் மோதல்கள் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அவ்வாறான சூழ்நிலை ஏற்படுமாக இருந்தால் அவற்றை தடுப்பதற்கு காவல்துறை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.