யுக்ரைனில் யுத்தத்தை தவிர்க்கும் வழி உண்டு / ஃபிரான்ஸ் ஜனாதிபதி

5 years ago
World
(53 views)
aivarree.com

யுக்ரெயினில் யுத்தம் ஒன்று ஏற்படுவதை தவிர்ப்பதற்காக உடன்பாடு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.


ரஷ்யா தனது படைகளை யுக்ரெயின் எல்லையில் குவித்து வரும் நிலையில், யுக்ரெயினை கைப்பற்றும் நோக்கில் இந்தப் படை குவிப்பு இடம்பெறுவதாக மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்துகின்றன.


எனினும் அதனை மறுத்துள்ள ரஷ்யா நேட்டோ அமைப்பில் யுக்ரெயின் உள்வாங்கப் படுவதை தவிர்க்க வேண்டுமெனவும் கிழக்கு ஆப்பிரிக்காவில் நேட்டோ படைகுறைப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து வருகிறது.


இந்த நிலையில் மொஸ்கோவுக்கு செல்கின்ற பிரான்ஸ் ஜனாதிபதி, ரஷ்யா தமது பாதுகாப்பு சம்பந்தமான அவதானத்தை கொண்டிருப்பது சட்ட ரீதியானது என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் யுக்ரெயினில் யுத்த தவிர்ப்புக்கான உடன்பாடு ஒன்று ஏற்படுத்தப்பட முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.