மிச்சல் பெச்சலட்டின் அறிக்கை அரசுக்குக் கையளிக்கப்படுகிறது

4 years ago
Sri Lanka
(157 views)
aivarree.com

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49வது மாநாடு ஜெனீவாவில் இந்த மாத இறுதியில் தொடங்கி – மார்ச் மாத நடுப்பகுதி வரையில் இடம்பெறவுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கருதப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் அதிகாரத்தை வழங்கும் வகையில் கடந்த 46ஆம் அமர்வில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணையின் தற்போதைய நிலைமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்சலட் முன்வைக்கவுள்ள அறிக்கை திங்கட்கிழமை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்படவுள்ளது.

இதற்கான பதிலை இலங்கை அரசாங்கம் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக வழங்கும் என்று, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.