ப்ளாஸ்டிக் பாத்திரங்களில் ஆபத்தான BPA நச்சு பொருள் / குழந்தை பால் போத்தலும் உள்ளடக்கம்

4 years ago
Sri Lanka
(119 views)
aivarree.com

குழந்தைகளின் பால் போத்தல் உள்ளிட்ட பல்வேறு ப்ளாஸ்டிக் பாத்திரங்களில் மிகவும் ஆபத்தான பிஸ்ஃபெனல் ஏ ( Bisphenol A / BPA) வகை நச்சுப்பொருள் கலக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மத்திய சூழலியல் நீதி அமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரசாயன பதார்த்தம், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்துவதுடன், ஆண் பெண் இருபாலாருக்கும் மலட்டுத் தன்மை ஏற்படவும் செய்வதால் பல்வேறு நாடுகளில் நச்சுப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்த ‘நச்சுப் பொருள் கலக்கப்படவில்லை’ (Bisphenol free) என்று போலியான முத்திரையுடன், குழந்தைகளுக்கான பால் போத்தல்கள், சிறார்களின் உணவு பெட்டிகள், மீள்பாவனைக்கு உட்படுத்தக்கூடிய ப்ளாஸ்டிக் போத்தல்கள் என்று பல்வேறு பொருட்களிலும் இந்த நச்சுப் பதார்த்தம் கலக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய சூழலியல் நீதி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

எமது வட்சப் குழுவில் இணையுங்கள்

https://chat.whatsapp.com/DzIgQk7SDjJJVFUqb6BU8w