மருத்துவர்கள் திங்கள் போராட்டம் /

5 years ago
tamilnewsline.com

இலங்கை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட உள்ளது.

சம்பள உயர்வு சம்பந்தமான விடயத்தில் அரசாங்கம் கொள்கை ஒன்றை பின்பற்றாமல் நடந்து கொள்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான தீர்மானம் வியாழக்கிழமை இடம்பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பான இறுதி தீர்மானம் அந்த சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவால் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படும்.