பொருளாதாரத் தடை / மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை / 9 முக்கிய புள்ளிகள்

4 years ago
Sri Lanka
(101 views)
aivarree.com

இலங்கையில் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களை இலக்கு வைத்து பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் பரிந்துரைத்துள்ளார்.


அவர் எதிர்வரும் 3ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49வது கூட்டத்தொடரில் முன்வைக்கவுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான 9 விடயங்களாவன. 

  1. பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பாக நம்பகமான குற்றச்சாட்டுகள் இருப்பவர்களை இலக்கு வைத்து பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து ஆராய்வது. 

  2. ஈஸ்ட்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கையை வெளியிடுவது. 

  3. தமது அலுவலகத்துடன் அரசாங்கம் சீரான தொடர்பினை பேணி வந்தாலும், மனித உரிமை நிலைமைகள் குறித்த கரிசனை உள்ளன.

  4. சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு அமைவான பல மாற்றங்களை அரசாங்கம் செய்ய வேண்டும். 

  5. மனித உரிமைகள் மற்றும் மறுசீரமைப்புக்கு ஏற்ப முற்போக்கான அதிகாரப் பகிர்வுடன் கூடிய புதிய அரசியல் யாப்பினை வரைதல். 

  6. பொதுமக்களின் வாழ்வில் இராணுவத்தினர் செல்வாக்கு செலுத்தும் நிலைமையைக் குறைக்க நடவடிக்கை எடுத்தல். 

  7. பயங்கரவாத தடை சட்டத்தின் பயன்பாட்டை நீக்கி சர்வதேச மனித உரிமைகள் விடயங்களுடன் ஒத்துச் செல்கின்ற புதிய சட்டத்தை அமுலாக்குதல். 

  8. இலங்கையில் அனைத்து தரப்பினரும் மேற்கொண்டவர்களுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு உறுப்பு நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.

  9. வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கையர்களது வழக்குகளை விரைவுபடுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுப்பு.