பூஸ்டரைப் பெற்றுக்கொள்ளுங்கள்/ கர்ப்பிணி பெண்களுக்கு அறிவுறுத்தல்

5 years ago
tamilnewsline.com

கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ள கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்கள் முடிந்தவரையில் விரைவாக பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது சுமார் 500 கர்ப்பிணிப்பெண்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

Reported by
Editorial Reporter