புலமைப் பரிசில் | அகில இலங்கை ரீதியில் தமிழ் மாணவன் முதலிடம்

4 years ago
Sri Lanka
(797 views)
aivarree.com

“எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவேன்” என 2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் தெரிவித்துள்ளார்.

2021 தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

இதுவரையில் கிடைக்கப்பெற்ற விபரங்களின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் அவரே அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவராக உள்ளார்.