திருமலையில் 6 நாட்களாக உயிருக்கு போராடும் யானை (படம்)

4 years ago
Sri Lanka
(268 views)
aivarree.com

திருகோணமலை – பன்குளம் பகுதியில் யானை ஒன்று குழிக்குள் விழுந்து 6 நாட்களுக்கு மேல் மீட்கப்படாதுள்ளது.


பன்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வாய்க்கால் ஒன்றினுள் குறித்த யானை விழுந்து கிடக்கிறது.

இது தொடர்பாக அய்வரி செய்திகள் வனவளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு வினவியது.

குறித்த யானையின் காலில் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறாத நிலையில் அதற்கு மருத்துவம் பார்த்திருப்பதாகவும், காயம் ஆறிய பின்னரே அதனை மீட்டு தூக்க முடியும் எனவும் வனவளத்துறை அய்வரிக்கு தெரிவித்தது.