தாய் மற்றும் மகளைக் கத்தியால் குத்தி, தமது உயிரையும் மாய்க்க முயன்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்ப பெண் மற்றும் அப்பெண்ணின் மகள் ஆகியோர் மீது குறித்த நபர் வீடு புகுந்து சரமாரியாகக் கத்தியால் குத்தி விட்டு, தானும் அதிகளவான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.
சம்பவத்தை அறிந்த அயலவர்கள் மூவரையும் மீட்டு யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
