தமிழ்த் தேசிய கட்சிகளின் கடிதம் இந்திய உயர்ஸ்தானிகரிடம்

5 years ago
tamilnewsline.com

இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்புதற்காகத் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள கூட்டுக் கடிதம், இந்திய உயர்ஸ்தானிகரகத்திடம் கையளிக்கப்பட்டது.


தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், அது கிடைக்கும் வரையில் தற்காலிக ஏற்பாடாக 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் இந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. 


இலங்கை தமிழரசு கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் விடுதலை கழகம் என்பன இதில் கைச்சாத்திட்டுள்ளன.