சாரதி அனுமதி அட்டை கால நீடிப்பு.  

4 years ago
Sri Lanka
(196 views)
aivarree.com

சாரதி அனுமதி அட்டை வழங்கும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடக்கக் காலத்தில் மூடப்பட்டிருந்ததால், பெரும் எண்ணிக்கையான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

அனைத்தையும் ஒரே தடவையில் முகாமை செய்வது சிரமம் என்பதால், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மாற்று நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதன்படி, 2022 ஏப்ரல் 1 தொடக்கம் ஜூன் 30 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதி அட்டைகளின் செல்லுபடி காலம், காலாவதி ஆகும் தினத்திலிருந்து 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று, ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல், செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் அனுமதி அட்டைகளின் காலம், காலாவதி தினத்திலிருந்து 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

-மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்.