சஜித்தே ஜனாதிபதி வேட்பாளர் / அடித்து கூறுகிறார் திஸ்ஸ

5 years ago
tamilnewsline.com

அடுத்த ஜனாதிபதி தேரதலில் சஜித் பிரேமதாசவே எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக களமிறங்குவார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்

சஜித் பிரேமதாசவுக்கும் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பான போட்டி நிலவுவதாக தகவல்கள் இருக்கின்றன.

இந்த நிலையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

எதிர்கட்சிகள் அனைத்தும் பிரேமதாசவை ஆதரிக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்