சகிப் அல் ஹசன் | ஓய்வு வழங்கல்

4 years ago
SPORTS
(17 views)
aivarree.com

சகிப் அல் ஹசன், பங்களாதேஸ் துடுப்பாட்ட வீரருக்கு தற்காலிகமாக ஓய்வு வழங்கப்படுவதாக பங்களாதேஸ் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

இந்த மாதம் 12ம் திகதி ஆரம்பமாகின்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் சகிப் அல் ஹசன் இணைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் தமக்கு சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வு தேவைப்படுவதாக அவர் கூறி இருந்தார்.

இந்தநிலையில் அவரது உடல் மற்றும் உள நிலைமைகளைக் கருத்திற் கொண்டு அவருக்கு ஏப்ரல் 30 வரையில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஸ் அணி மார்ச் 12 முதல் ஏப்ரல் 8 வரையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.