ஒட்டாவாவில் அவசரகால நிலை

5 years ago
tamilnewsline.com

கனடா தலைநகரான ஒட்டாவாவில் ட்ரக் சாரதிகளின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.


ட்ரக் சாரதிகள் கட்டாயமாக கொவிட் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவுக்கு எதிராக போராட்டம் இடம்பெறுகிறது.


ஒரு வார காலமாக இடம்பெற்று வருகின்ற இந்தப் போராட்டத்தின் காரணமாக ஒட்டாவா நகரில் கட்டுப்பாடு முழுமையாக இழக்கப்பட்டிருப்பதாக, அதன் நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் அங்குள்ள மக்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்