ஐஎஸ்ஐஸ் (ISIS) தீவிரவாதிகளின் தலைவரைக் கொன்றது அமெரிக்கா

5 years ago
tamilnewsline.com

வடமேற்கு சிரியாவில் அமெரிக்கச் சிறப்புப் படைகள் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத குழுத் தலைவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் இந்த அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்டார்.

‘எங்கள் ஆயுதப் படைகளின் திறமை மற்றும் துணிச்சலுக்கு நன்றி, நாங்கள் அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷியை போர்க்களத்திலிருந்து அகற்றியுள்ளோம்’ என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அனைத்து அமெரிக்கர்களும் பத்திரமாகத் திரும்பிவிட்டனர் என்றும் அவர் கூறினார்.

சிரியாவின் உள்ள அட்மே நகரில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் 6 குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.