எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்திய நிறுவனங்கள்

4 years ago
Sri Lanka
(117 views)
aivarree.com

நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

லிட்ரோ நிறுவனம், லாஃப்ஸ் கேஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே எரிவாயு விநியோகத்தை நிறுத்தியுள்ளன.

எரிவாயு இருப்பு நிறுவனங்களுக்கு கிடைக்கப் பெறாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கப்பல்கள் வந்து இருக்கின்ற போதும் அவற்றில் இருந்து எரிவாயுவை தரை இறங்குவதற்கான நாணய கடிதங்களை பெறுவதில் சிக்கல் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Reported by
Editorial Reporter