எரிபொருள் விலை அடுத்தவாரம் அதிகரிக்கும்!

4 years ago
Sri Lanka
(112 views)
aivarree.com

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் யாவும் அடுத்தவாரம் அதிகரிக்கும் என அய்வரிக்கு தகவல் கிடைத்துள்ளது.

நிதியமைச்சு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்காத ஒவ்வொரு நாளும், எரிபொருள் கூட்டுத்தாபனம் பெரும் நட்டத்துக்கு முகம் கொடுக்கிறது.

எனவே அநேகமாக திங்கள் முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடி செய்திகளுக்கு, எமது வட்சப் குழுவுடன் இணைக

https://chat.whatsapp.com/DzIgQk7SDjJJVFUqb6BU8w