இலங்கையிலுள்ள உக்ரைன், ரஷ்யர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு

4 years ago
Sri Lanka
(31 views)
aivarree.com

இலங்கையிலுள்ள உக்ரைனியர்கள் மற்றும் ரஷ்யர்களுக்கு இலவச விசா நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து அதிக எண்ணிக்கையானவர்கள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்துள்ளனர்.

உக்ரைன் யுத்தம் காரணமாக அவர்கள் திரும்பிச் செல்ல விமான போக்குவரத்து இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கு கட்டணம் இன்றி 2 மாதங்களுக்கு விசா நீடிக்கப்படுவதாக குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.