இரு நாட்களாக செயலிழந்திருந்த அனல்மின் நிலையங்கள் மீண்டும் வழமைக்கு

4 years ago
Sri Lanka
(66 views)
aivarree.com

தொழிநுட்பக் கோளாறினால் இரண்டு நாட்களாக செயலிழந்திருந்த கெரவலப்பிட்டி மேற்கு கரையோர அனல்மின் நிலையம் மற்றும் சோஜிட்ஸ் அனல்மின் நிலையம் ஆகியன சீரமைக்கப்பட்டன.

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் எரங்க குடஹேவா இதனைத் தெரிவித்தார்.

கெரவலப்பிட்டி மேற்கு கரையோர மின் உற்பத்தி நிலையம் 270 மெகாவோட் மின்சாரத்தையும், சோஜிட்ஸ் மின் உற்பத்தி நிலையம் 130 மெகாவோட்களையும் உற்பத்தி செய்யவுள்ளன.