அவுஸ்திரேலியாவிடம் கை நீட்டும் அரசாங்கம்

5 years ago
tamilnewsline.com

எதிர்வரும் நாட்களில் இரண்டு நாடுகளிடமிருந்து கடன் இல்லை சலுகையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயல்வதாக, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


இதன்படி இந்தியாவிடம் இருந்து 1 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் எல்லை சலுகையையும் அவுஸ்திரேலியாவிடம் இருந்து 200 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் எல்லை சலுகையும் பெறவுள்ளது.


அவுஸ்திரேலியாவிலிருந்து பெரும் கடன் எல்லை பருப்பு உள்ளிட்ட தானிய வகை இறக்குமதிக்காக பயன்படுத்தப்பட உள்ளது.


வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான கடன் இல்லை சலுகை கோரப்படுகிறது.


இது எதிர்வரும் பண்டிகை காலத்தில் இலங்கையில் அத்தியாவசிய பொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கையாக அமையும் என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

த சண்டே டைம்ஸ்