வெள்ளவத்தையில் மீட்கப்பட்ட சடலம் மாலைதீவு இளைஞருடையது

4 years ago
Sri Lanka
(40 views)
aivarree.com

மாலைதீவில் இருந்து இலங்கை வந்து உயர்கல்வி கற்றலில் ஈடுபட்ட மாணவர் ஒருவரே வெள்ளவத்தை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று(05) இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன.

அவற்றில் ஒன்று மாலைதீவைத் சேர்ந்த இப்ஹாம் நசீர் என்ற 21 வயது இளைஞருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவரது சடலடத்தில் வெட்டுக்காயங்களும் உள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இறுதியாக அவருடன் உரையாடியதாகவும், அதன் பின்னர் அவரை தொடர்பு கொண்டிருக்க முடியவில்லை எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.