அவசரமாக IMFஐ நாடுகிறது அரசாங்கம் | அமெரிக்கா பறக்கிறார் பசில்

4 years ago
Sri Lanka
(192 views)
aivarree.com

நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க அரசாங்கம் திண்டாடுகிறது.

இந்த நிலையில் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தை (IMF) நாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வொஷிங்டன் சென்று, சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.

இதன்போது தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்ற கடன் திட்ட யோசனை ஒன்றை பசில் ராஜபக்ஷ அவர்களிடம் சமர்ப்பிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

– ரொய்ட்டர்ஸ்