அமைச்சர் டளஸுக்கு அதிர்ச்சி கொடுத்த யாழ் ஊடகவியலாளர்கள் (படம்)

4 years ago
Sri Lanka
(104 views)
aivarree.com

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெகுசன ஊடக துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில், கருப்பு பட்டி அணிந்தவாறு யாழ். ஊடகவியலாளர்கள் அடையாள எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கோரியும், கொழும்பில் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் இல்லம் தாக்கப்பட்டமையை கண்டித்தும் இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் என்பவர்கள் தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் என்று எங்களிடம் இருந்து ஒரு பாகுபாடும் இல்லை.

யுத்த காலத்தில், நாங்கள் நெருக்கடிகளை சந்தித்த வேளை எங்களுக்காக முன்னின்று களமிறங்கி போராடியவர்களில் கணிசமாக ஊடகவியலாளர்கள் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள், என்று யாழ் ஊடக அமையத்தின் இணைப்பாளர் கூறினார்.