2020-2021 காலப்பகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்டதாகக் கூறப்படும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றைச் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான வேலைத்திட்டம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றில் தொழிற்கட்சியின் உறுப்பினர் Tonia Antoniazzi கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதில் வழங்கிய ராஜாங்க அமைச்சர் Amanda Milling இந்த விடயம் தொடர்பான இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரிடம் பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் கேள்வி எழுப்பி இருப்பதாகக் கூறினார்.
மேலும் இலங்கையின் மனித உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக மிகவும் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
