உயர்தரப் பரீட்சை தொடர்பான மனு நிராகரிப்பு

5 years ago
Sri Lanka
(64 views)
aivarree.com

உயர்தரப் பரீட்சையை இடை நிறுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட நீதிபேராணை கோரும் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மனுவில் கூறப்பட்ட நிவாரணத்தை வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித்த கருணா தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக திட்டமிட்டபடி பெப்ரவரி 7 ஆம் திகதி உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன.

கொவிட் காரணமாக இந்த பரீட்சைகளை பிற்போடுமாறு, சமூக செயற்பாட்டாளர் சட்டத்தரணி நாகாந்த கொடிதுவக்கு இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

Reported by
Editorial Reporter