தாயால் கைவிடப்பட்ட சிங்கக்குட்டி – மக்கள் பார்க்க அனுமதி

4 years ago
Sri Lanka
(61 views)
aivarree.com

தாய் சிங்கத்தினால் பிறந்த உடனேயே கைவிடப்பட்ட சிங்கக்குட்டி ஒன்று ரிதியாகம சுற்றுலா பூங்காவில் உள்ளது.


நான்கரை மாதங்களான இந்த சிங்கக்குட்டிக்கு டோரா என்று பெயரிடப்பட்டுள்ளது.


இதனைப் பொதுமக்கள் நாளை முதல் நாளாந்தம் காலை 9 மணியிலிருந்து 10.30 வரையிலும், பின்னர் பிற்பகல் 3.30ல் இருந்து 5 மணி வரையிலும் பார்வையிட முடியும். 


பிறந்து நான்கரை மாதங்களே என்பதால் அதனை நாளாந்தம் முழு நேரமும் பொதுமக்கள் பார்க்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.