ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட பிரத்யேக கடல் வழியை மீறிச் சென்ற எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று, கடலில் மிதந்த கடற்படை கண்ணிவெடியில் மோதி வெடித்துச் சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பான போக்குவரத்து பாதையை விட்டு குறித்த கப்பல் விலகி சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந் வெடிப்ப சம்பவத்தில் ஏற்பட்ட இடிபாடுகள் மற்றும் வெடிப்புச் சம்பவத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயமடைந்தோர் அல்லது கப்பலின் அடையாளம் குறித்த முழுமையான விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
