CEYPETCO அறிவிப்பு: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு – 92 ஒக்டேன் ரூ.414, டீசல் ரூ.382

3 hours ago
(118 views)
aivarree.com

கொழும்பு, ஜூன் 29 –
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO) இன்று (ஜூன் 29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது.

இந்த விலைத்திருத்தத்தின் மூலம், 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 414 ரூபாய்நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டோ டீசலின் (Auto Diesel) விலை ஒரு லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்பட்டு, 382 ரூபாய் ஆக சரிசெய்யப்பட்டுள்ளது.

95 ஒக்டேன் பெட்ரோல், சூப்பர் டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட ஏனைய அனைத்து எரிபொருள் வகைகளின் விலைகளிலும் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் மற்றும் அந்நிய செலாவணி வீதங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த விலை மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் விளக்கமளித்துள்ளது.