குளவி கொட்டி 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்

4 years ago
Sri Lanka
(92 views)
aivarree.com

மொனராகலை – எத்திமலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவி கொட்டுக்கு இலக்கான 60க்கும் அதிகமான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில் 63 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 3 பேர் ஆசிரியர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலைக்கு அருகில் இருந்த குளவிக் கூடு ஒன்று களைந்து அவர்களை கொட்டியுள்ளன.