முன்னுதாரணமான வாசுதேவ நாணயக்கார

4 years ago
Sri Lanka
(87 views)
aivarree.com

தமது சகாக்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கப்பட்டதை அடுத்து, அமைச்சுப் பொறுப்பினை வகிக்கப்போவதில்லை என்று வாசுதேவ நாணயக்கார அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வீட்டையும் வாகனத்தையும் அமைச்சின் செயலாளரிடம் கையளித்து வெளியேறியுள்ளார்.

இதுவே சரியான நடைமுறை என்றும், தமது சகோதாரரால் வழங்கப்பட்ட சிறிய வாகனம் ஒன்றை தாம் இனி பயன்படுத்தவிருப்பதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பல வருடங்களுக்கு முன்னர் அமைச்சர்களாக இருந்தவர்கள் கூட இன்னும் தங்களது உத்தியோகபூர்வ வாகனங்களை கையளிக்காத நிலைமை இருக்கிறது.

அண்மையில் பதவி நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் தங்களது வாகனங்களை இன்னும் கையளிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.