இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தமது பெற்றோல் விலையை வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
இதன்படி CPC லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 55 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 176 ரூபாவாக நிர்ணயிக்கப்படும்.
லங்கா 92 ஒக்டேன் பெற்றோல் விலை 77 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 254 ரூபாய் புதிய விலையாக நிர்ணயிக்கப்படும்.
95 ஒக்டேன் பெற்றோல் 283 ரூபாவாகவும், லங்கா சுப்பர் டீசலின் விலை 254 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்படும்.

