CPC எரிபொருள் விலை | வெளியான தகவல்

4 years ago
Sri Lanka
(256 views)
aivarree.com

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தமது எரிபொருள் விலையை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் கூட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் தமது எரிபொருள் விலையை சடுதியாக அதிகரித்துள்ளது.

நீண்டகாலமாக CPC தமது பெற்றோல் டீசல் விலைகளை அதிகரிக்க கோரிக்கை விடுத்து வருகின்ற போதும், அரசாங்கம் இன்னும் தலைசாய்க்கவில்லை.

எவ்வாறாயினும், திங்கட்கிழமைக்குப் பின்னர் கட்டாயம் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்று, இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் ஐக்கிய தொழிற்சங்க படையணி தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெள்ளிக்கிழமை(11) இரவு CPC எரிபொருள் விலையை அதிகரிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளபோதும், அதை இன்னும் உறுதிபடுத்த முடியவில்லை.