வடகொரியா மீண்டும் நெடுந்தூர ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 26ம் திகதியும், பின்னர் மார்ச் மாதம் 5ம் திகதி உளவு செய்மதி ஒன்றுக்கான ரொக்கட்களே செலுத்தப்பட்டதாக வடகொரியா தெரிவிக்கிறது.
ஆனால் சோதனை முயற்சியாக நெடுந்தூர ஏவுகணை ஒன்றையே வடகொரியா ஏவியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அணுவாயுதங்களை சுமந்து சென்று சுமார் 5,500 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இலக்கை இது தாக்கும் வல்லமை கொண்டது என தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து அமெரிக்கா வடகொரியாவுக்கு எதிரான மேலதிக பொருளாதார தடைகளை விதிக்கவுள்ளது.
