களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பல்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவியில் இருந்த ஜயந்த சமரவீர அண்மையில் பதவி விலகினார்.
இதனை அடுத்து லொஹான் ரத்வத்த அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் சிறைக்கு சென்று அங்குள்ள அரசியல் கைதிகள் சிலரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியமைக்காக அவர் மீது கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
