இந்திய – இலங்கை அமைச்சர்களுக்கு இடையில் பேச்சு | முக்கிய இணக்கப்பாடுகள்

5 years ago
tamilnewsline.com

இந்திய வெளிவிவகார அமைச்சர் S. ஜெய்சங்கர் மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மிகவும் வினைத்திறனாக இந்த உரையாடல் இடம்பெற்றதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரகம் ட்விட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.

இதன் போது இந்தியா இலங்கைக்கு கூடுமான அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதற்கு உறுதி அளிக்கப்பட்டது.

மேலும் இந்த மாத இறுதியில் திகதி ஒன்றை நிர்ணயித்து பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு விஜயம் செய்வது குறித்தும் இணங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.