சோழர் கால சிவலிங்கத்தின் பாகம் பொலன்னறுவையில் மீட்பு

4 years ago
Sri Lanka
(130 views)
aivarree.com

பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சிவலிங்கத்தின் அடிபாகம் ஒன்றை தொல்பொருள் திணைக்களம் திங்களன்று (07) கண்டுபிடித்துள்ளது.

பொலன்னறுவை – எத்துமல்பிட்டி வாவி கரைக்கு அருகில் இருந்த இந்த சிவலிங்க பாகம் குறித்து, சில தினங்களுக்கு முன்னர் பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைத்த தகவலின்படி இது மீட்கப்பட்டுள்ளது.

கி.பி 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ சாம்ராஜ்யத்தின் சிற்பக்கலையை ஒத்ததாக இந்த கல் கட்டமைப்புகள் தொழிநுட்பம் அமைந்துள்ளதாக, பொலன்னறுவை பிரதேசத்திற்குப் பொறுப்பான தொல்பொருள் உதவிப் பணிப்பாளர் பி.எச்.நளின் வீரரத்ன தெரிவித்தார்.

“முற்கால சோழர் காலத்தில் பொலன்னறுவை இராச்சியத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழமையானதும் சிறியதுமான சிவலிங்க பாகம் இதுவாகும், என அவர் கூறினார்.

தற்போது இந்த கல் பொலன்னறுவை தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

#அத