போர்க்குற்ற ஆதாரங்களை திரட்டும் பொறிமுறைக்கு கர்தினால் ஆதரவு?

4 years ago
Sri Lanka
(30 views)
aivarree.com

2021ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின் பிரகாரம், போர்க்குற்ற ஆதாரங்களை திரட்டும் பொறிமுறைக்கு உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உப குழு கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

அத்துடன் ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னணி என்னவென்பது, இடம்பெறுகின்ற விசாரணைகளின் ஊடாக தெரியவரும் என்ற உறுதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், அவரது உரையில் போர்க்குற்ற ஆதாரங்களை திரட்டும் பொறிமுறைக்கா? அல்லது ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை திரட்டும் விடயம் குறித்தா? ஆதரவு கோரியுள்ளார், என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை.

ஆனால் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை திரட்டும் பொறிமுறையே பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.