ஷேன் வோர்ன் மரணத்தின் மர்மம் தீர்ந்தது.

4 years ago
World
(127 views)
aivarree.com

அவுஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்னின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டு வந்திருந்தன.

குறிப்பாக அவர் மரணிக்கும் போது தங்கி இருந்த தாய்லாந்து வில்லா அறையில் இரத்தத்துளிகள் காணப்பட்டதை அடுத்து, தாய்லாந்து காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டிருந்தனர்.

பிரேத பரிசோதனை முடிவுகளின் படி அவருக்கு ஏற்பட்டது இயற்கை மரணமே என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது பூதவுடல் அவுஸ்திரேலிய தூதரகம் ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டு அங்கு அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.