தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு

4 years ago
Sri Lanka
(100 views)
aivarree.com

உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 2000 டொலர்கள் 86 சதம் என்ற உச்சத்தை தொட்டு மீண்டும் 1980.65 டொலர்களாக குறைவடைந்தது.


2020 செப்டம்பர் மாதத்தின் பின்னர் ஏற்பட்ட அதியுச்ச விலையேற்றம் இதுவாகும்.


இதேவேளை கொழும்பு செட்டியார் தெருவில் தங்க விற்பனை விலை குறித்து அய்வரி செய்திகள் ஆராய்ந்தது.


இதன்படி 24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்று 132,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலை பவுண் 120,900 ரூபாவாகவும் நிலவுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமையை விட தங்கத்தின் விலை 1500 ரூபாவால் அதிகரித்துள்ளது.