பாடசாலை குழுக்களாக பிரித்து நடத்தப்படுவது ஏன்? / சுகாதாரத் துறை விளக்கம்

4 years ago
Sri Lanka
(124 views)
aivarree.com

விடுமுறைக்கு முன்னர் கொவிட் நோயாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டு வந்தபோதும், மாணவர்கள் ஒரே சமயத்தில் வரவழைக்கப்பட்டு பாடசாலை நடத்தப்பட்டன.

தற்பொழுது கொவிட் கட்டுப்பாட்டுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிற போதும், திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கும் பாடசாலைகள் வகுப்பு ஒன்றில் 20 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு பாடசாலை நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்திருக்கிறது.

இதற்கான காரணம் குறித்து சுகாதார அமைச்சின் கொவிட் நோய் இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானியிடம் அய்வரி செய்திகள் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த அவர், “ஏற்கனவே கொவிட் குறைந்த காலப்பகுதியில் பாடசாலைகளையும் நிகழ்வுகளையும் கட்டுப்பாடின்றி நடத்தியதன் காரணமாக நோயாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தது.

இதனால் கிடைக்கப்பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இப்பொழுது கட்டுப்பாட்டுடன் பாடசாலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது, என விளக்கமளித்தார்.