4 மாதங்களில் 9 பேர் மரணம் / மர்ம நீர்வீழ்ச்சிக்கு செல்ல இனி தடை (படம்)

4 years ago
Sri Lanka
(108 views)
aivarree.com

வெல்லவாய – எல்லேவல நீர்வீழ்ச்சிக்கு செல்ல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதன்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று கடந்த 4 மாதங்களில் 7 பேர் மரணித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்றைச் சேர்ந்த மேலும் 2 பேர் மரணித்தனர்.

இதனை அடுத்து குறித்த நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா செல்ல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.