உக்ரைனில் என்ன நடக்கிறது/ இறுதி செய்திகள் (சுருக்கம்)

4 years ago
World
(99 views)
aivarree.com

1) உக்ரைன் தலைநகருக்கு அருகில் 40 மைல் நீளத்துக்கு ரஷ்யாவின் இராணுவ படை குவிக்கப்பட்டுள்ளமை செய்மதி படங்களில் உறுதியாகியுள்ளது.

2) ரஷ்யா உக்ரைனில் திங்களன்று வொக்கியும் பொம்ப் எனப்படும் வாயு குண்டு ஒன்றை பயன்படுத்தியுள்ளது – இது சுற்றுசூழலில் உள்ள ஒக்சிஜனை திரட்டி நீண்ட வெடிப்பு அலையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

3) ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிட விரும்புகின்ற வெளிநாட்டவர்களுக்கு உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது.

4) பறப்பதற்கு தடுக்கப்பட்ட பிரதேசத்தை அறிவிக்குமாறு உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்காவை கோரியுள்ளார் – ஆனால் இதனை அமெரிக்கா மறுத்துள்ளது. அவ்வாறு செய்தால் அமெரிக்கா நேரடியாக ரஷ்யாவுடன் யுத்தம் செய்வதற்கு சமம் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

5) உக்ரைனில் இடம்பெற்ற மனிதாபிமானத்துக்கு விரோதமான செயல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் குறித்து விசாரணையை ஆரம்பிக்கவிருப்பதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

6) ரஷ்யாவின் மத்திய வங்கிக்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

7) உக்ரைனில் இருந்து 520,000 பேர் வெளியேறியுள்ளனர். யுத்தத்தினால் 352 பொதுமக்கள் மரணித்துள்ளனர்.

8) உலக ரக்பி சம்மேளனம் ரஷ்யாவையும் பலாரஸையும் இடைநிறுத்தியுள்ளது. சர்வதேச காற்பந்து சம்மேளனம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய காற்பந்து சம்மேளனம் என்பன ரஷ்ய கால்பந்து அணியை தடை செய்துள்ளன.

9) வோல்ட் டிஸ்னி இனி ரஷ்யாவில் தமது திரைப்படங்களை திரையிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது – த பெட்மென் திரைப்படத்தை ரஷ்யாவில் திரையிட போவதில்லை என்று வோர்னர் பிரதர்ஸ் அறிவித்துள்ளது.

10) ரஷ்யா, பலாரஸ் படையினரை தமக்கு எதிராக பயன்படுத்த முயற்சிப்பதாக உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது – உக்ரைன் – ரஷ்ய பேச்சுவார்த்தை பலாரஸிலேயே இடம்பெற்றுள்ளது.

11) உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், தொடர்ந்தும் பேசலாம் என்ற விடயத்தைத் தவிர வேறு எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.

12) உலக தாய்க்வுண்டோ சம்மேளனம், அமெரிக்க ஜனாதிபதி புட்டினுக்கு வழங்கிய கௌரவ கறுப்பு பட்டியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

13) கனடா, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளதுடன், உக்ரைனுக்கு தாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை வழங்குகிறது.