3 நாட்களுக்கு நாட்டில் கடும் மழை/ வளிமண்டலவியல் எச்சரிக்கை

5 years ago
tamilnewsline.com

புதன்கிழமை (2) முதல் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் 200 மில்லிமீற்றர் அளவில் கடுமையான மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் திங்கள் (1) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

காலி, மாத்தறை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.